நடிகர் நிஷாந்த் ரூஸோ கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘சித்தார்த்’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஜூட் ரொமாரிக் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘சித்தார்த்’. இதில் நடிகர் நிஷாந்த் ரூஸோ கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ராஸ் நடிக்கிறார்.
லோக்நாத் சஞ்சய் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜேடி இசையமைக்கிறார். எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை எபிக் தியேட்டர் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிஹரன் தயாரிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஆசைதான் அழிவுக்கு காரணம். எனவே விழிப்புணர்வுடன் இருப்பதும், எம்மை சுற்றி நடப்பவற்றை அறிந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் மையமாக வைத்து இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் எக்சன் திரில்லர் என்டர்டெய்னராக தயாராகிறது” என்றார்.