அஞ்சல் திணைக்களத்தின் சேவைக்கட்டணம் அதிகரிப்பு

அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேவைக் கட்டண அதிகரிப்புக்கான சுற்று நிருபம் அனைத்து அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

முன்னதாக மின் மற்றும் நீர் கட்டணங்களுக்காக ஐந்து ரூபாய் மாத்திரமே அறவிடப்பட்ட நிலையில் தற்பொழுது 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 20 ரூபாய் அறவிடப்படுகின்றது.

இலங்கை மின்சார சபையினால் இதுவரை அஞ்சல் திணைக்களத்திற்கு நூற்று இரண்டு வீதம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த கட்டணத்தை நூற்றுக்கு ஒரு வீதமாக குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால், மின் பாவனையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் அலுவலகங்களுக்கான தினசரி செலவீனம் அதிகரித்தமையும் குறித்த கட்டணத்தை அதிகரிப்பதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *