
( வாஸ் கூஞ்ஞ) 07.11.2022
நாட்டை துண்டாடவோ தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம்’ வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு கோரிய நூறு நாட்கள் செயல்முனைவின் நூறாவது நாள் மக்கள் பிரகடனம். 8 கார்த்திகை 2022 அன்று காலை 10.30 மணிக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் இடம்பெறுகின்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஆதரவில் ; வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் நூநு நாட்களாக சுழற்சி முறையில் மக்கள் குரலாக முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய் கிழமை 08.11.2022 அன்றுடன் நிறைவு பெறுகின்றது.
வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் மக்களால் மக்கள் குரல் என்ற தொணிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு போராடம் 01.08.2022 அன்று மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம் மக்கள் ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு’ வேண்டும் என்ற கோரிக்கையையே முன்வைத்திருந்தனர்.
இவ் கவனயீர்ப்பு போராட்டங்களின் நூறு நாட்கள் கடந்து இறுதி நாளில் பிரகடனத்துக்கான ஒன்றுகூடலில் பங்கேற்று தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும் முகமாக
2022.11.08 ந் திகதி காலை 10.30 மணிக்கு பின்வரும் இடங்களில் மக்கள் பிரகடனக் கூடல்கள் இடம்பெறுகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நல்லூர் பகுதியில் சங்கிலியன் பூங்கா
அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச பூங்காவிலும்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் சந்தி இளைஞர் மட்டம் விளையாட்டு மைதானத்திலும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னாமுனை மட்.புனித சூசையப்பர் கல்லூரி விளையாட்டு மைதானத்திலும்
வவுனியா மாவட்டத்தில் நகர சபை மைதானத்திலும்
திருகோணமலை மாவட்டத்தில் முத்தவெளி வெளியரங்கிலும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை விளையாட்டு மைதானத்திலும்.
மன்னார் மாவட்டத்தில் மன்னார் பொது விiயாட்டரங்கிலும் நடைபெற இருக்கின்றது என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா தெரிவித்துள்ளார்.