திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் இராணுவப் படையணியின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம், சாலியபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் 28 வயதுடைய முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் தற்போது இராணுவ படைப்பிரிவில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். கைதுசெய்யப்பட்ட மற்றைய நபர் மஹவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.
கடந்த மாதம் 27ஆம் திகதி அநுராதபுரம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை திருடிய இந்த இராணுவ பொலிஸ் உத்தியோகத்தர்.
அதனை விற்பனை செய்வதற்காக மஹவ பிரதேசத்தில் வசிக்கும் நண்பரிடம் மோட்டார் சைக்கிளை கையளித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.