அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்க காங்கிரஸின் கீழ் சபையான பிரதிநிதிகள் சபையின் 435 ஆசனங்களுக்கும் கடந்த 8 ஆம்திகதி தேர்தல் நடைபெற்றது.

இச்சபையில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு 218 ஆசனங்கள் தேவை.

இந்நிலையில்,  முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி 218 ஆசனங்களை வென்றுள்ளதாக  பிரதான ஊடகங்கள் கணித்துள்ளன. அக்கட்சி மொத்தமாக 218 முதல் 223 வரையான ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

ஜனநாயகக் கட்சிடி 210 ஆசனங்களை ‍ வென்றுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மேல் சபையான செனட் சபையில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி ஓர் ஆசனத்தினால் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அக்கட்சி 50 ஆசனங்களை வென்றுள்ளதாக கணிப்பிடப்பட்டள்ளமை குறிப்பிடதக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *