அயர்லாந்து எரிபொருள் நிலைய வெடி விபத்தில் 10 பேர் பலியாகினர்

அயர்லாந்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையித்தில் இடம்பெற்ற பாரிய வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறார்களும் அடங்குவதாக அயர்லாந்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து அயிலில் உள்ள சில கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

எரிபொருள் நிலைய வெடிப்பு சம்பவம் ஒரு விபத்தே என ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளதாக அயர்லாந்து பிரதமர் மைக்கல் மாட்டின் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது தனி நாடாக பிரிந்துள்ள வட அயர்லாந்து, தமது விசேட மீட்பு பணியாளர் குழுவொன்றை உடனடியாக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அனுப்பியுள்ளது.

இது தவிர, பாதிப்படைந்த அயர்லாந்து டொனிகல் சமூகத்தவர்களுக்கு தமது ஆழ்ந்த அனுதாபங்களை பிரித்தானிய பிரதமர் எலிசபெத் ட்ரஸ் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *