ரி20 உலகக் கிண்ண சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டம் உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் அவுஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட்டில் நடைபெறுகிறது.
இதன்படி, அயர்லாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்துள்ளது.
இதேவேளை, பத்தும் நிஸ்ஸங்க மற்றும் பிரமோத் மதுஷன் ஆகியோரின் உடல்நிலையை மதிப்பீடு செய்த ஸ்ரீலங்கா கிரிக்கெட், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணியை தாமதித்தே அறிவித்தது. .
இந்தநிலையில், இருவரது உடல் நிலையும் தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான பிறிதொரு விறுவிறுப்பான போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது.