அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை வைத்துள்ள நியூஸிலாந்து

அயர்லாந்துக்கு எதிராக அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழு 1க்கான தனது கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 35 ஓட்டங்களால் அவசியமான வெற்றியை நியூஸிலாந்து ஈட்டிக்கொண்டது.

இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் இப்போதைக்கு 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் நியூஸிலாந்து அரை இறுதி வாயிலுக்குள் ஒரு காலை நுழைத்துள்ளது.

அப் போட்டியில் அயர்லாந்து வீரர் ஜொஷ் லிட்ல் ஹெட் – ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்த போதிலும் அவரது அணி இறுதியில் தோல்வியைத் தழுவயது.

தற்போது நடைபெறும் ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டி, நியூஸிலாந்தின் நிகர ஓட்ட வேகமான நேர்மறை 2.133 ஐ விட சிறந்த நிகர ஓட்ட வேகப் பெறுதியை அவுஸ்திரேலியா பதிவுசெய்தால் அவுஸ்திரேலியா அரை இறுதியில் விளையாட முதலாவது அணியாக தகுதிபெறும்.

அல்லது நியூஸிலாந்து முதலாவது அணியாக தகுதிபெற்றுவிடும். எனவே தனது நிலை குறித்து திட்டவட்டமாக அறிந்துகொள்ள அவுஸ்திரேலியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான போட்டி முடிவுவரை நியூஸிலாந்து காத்திருக்க வேண்டியுள்ளது.

இது இவ்வாறிருக்கு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என எதிர்பார்த்த நியூஸிலாந்துக்கு கிடைத்த வெற்றி திருப்தி தருவதாக அமைந்திருக்காது.

 

 

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டவேண்டும் என்பதை அறிந்திருந்த நியூஸிலாந்து, ஆரம்பம் முதல் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தது.

முதல் 3 ஓவர்களில் நிதானத்துடன் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த நியூஸிலாந்து, படிப்படியாக 7 ஓட்டங்களிலிருந்து 9 ஓட்டங்கள் வரை உயர்த்திக்கொண்டது.

 

பின் அலன் (32), டெவன் கொன்வே (28) ஆகிய இருவரும் 35 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

அலன் ஆட்டமிழந்த பின்னர் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸுடன் 2ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களை கொன்வே பகிர்ந்தார்.

கொன்வே ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட க்ளென் பிலிப்ஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். (114 – 3 விக்.)

அதனைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனும் டெரில் மிச்செலும் 4ஆவது விக்கெட்டில் 31 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர்.

மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது 19ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் அணித் தலைவர் கேன் வில்லியம்சனை கெரத் டிலேனி எடுத்த பிடி மூலம் ஆட்டமிழக்கச் செய்த லிட்ல், அடுத்த 2 பந்துகளில் ஜேம்ஸ் நீஷாம், மிச்செல் சென்ட்னர் ஆகிய இருவரையும் எல்.பி.டபிள்யூ. முறையில் களம் விட்டு வெளியேறச் செய்து ஹெட்- ட்ரிக்கை பதிவு செய்தார்.

Mark Adair celebrates along with team-mates after dismissing Finn Allen, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் பதிவான இரண்டாவது ஹெட் – ட்ரிக் இதுவாகும்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய வீரர் தமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட கார்த்திக் மெய்யப்பன் முதலாவது ஹெட்-ட்ரிக்கைப் பதிவுசெய்திருந்தார்.

அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து சார்பாக பதிவான 2ஆவது ஹெட் – ட்ரிக் இதுவாகும்.

George Dockrell made a 15-ball 23, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக அயர்லாந்து வீரர் கெம்ஃபர் கேர்ட்டிஸ் 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

இதுவரை இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியில்  ப்றெட் லீ, கேம்ஃபர், வனிந்து ஹசரங்க, கெகிசோ ரபாடா, கார்த்திக் மெய்யப்பன், ஜொஷ் லிட்ல் ஆகிய அறுவரே ஹெட் – ட்ரிக் பதிவு செய்துள்ளனர்.

ஜொஷ் லிட்ல் ஹெட் – ட்ரிக்கைப் பதிவு செய்ததால் அதிர்ச்சி அடைந்த நியூஸிலாந்து ஒருவாறு ஓட்ட வேகத்தை சிறப்பாக கடைப்பிடித்து இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டுவந்தது.

கேன் வில்லியம்சன் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைப் பெற்றார்.

டெரில் மிச்செல் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

Josh Little leaps in celebration of his hat-trick, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

அயர்லாந்து பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கெரத் டிலேனி 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

அணித் தலைவர் அண்டி பெல்பேர்னி (37), போல் ஸ்டேர்லிங் (30) ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

Hat-trick taker Josh Little is congratulated by his team-mates, Ireland vs New Zealand, ICC Men's T20 World Cup 2022, Adelaide, November 4, 2022

ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்டெக்ளை இழந்த அயர்லாந்தினால் வீழ்ச்சியிலிருந்து மீண்டெழ முடியாமல்போனது.

ஒன்பது ஓவர்கள் நிறைவில் 70 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து மிகச் சிறந்த நிலையில் இருந்த அயர்லாந்து 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

மத்திய வரிசையில் ஜோர்ஜ் டொக்ரெல் (23) மார்த்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.

நியூஸிலாந்து பந்துவீச்சில் லொக்கி பேர்குசன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிச்செல் சென்ட்னர் 26 ஒட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டிம் சௌதீ 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் இஷ் சோதி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *