
இந்திய அணியின் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என இந்திய முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆசிய கிண்ண தொடரின் நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது.
இந்தநிலையில், போட்டியின் போது, இந்திய பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை கட்டுப்படுத்த தவறியதாகவும், அர்ஷ்தீப் சிங் பிடியினை தவறவிட்டு களத்தடுப்பில் சிறப்பாக செயற்பட்டிருக்கவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், அது தவறுதலாக நடந்த விடயமே என குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று சிறப்பாக ஆடியிருந்தார்கள், அதற்காக இந்திய அணியை விமர்சிப்பது சிறந்ததல்ல.
அர்ஷீப் சிங் ஒரு சிறந்த வீரர் எனவும், ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.