அற வழி போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுவிக்குமாறு கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்

( வாஸ் கூஞ்ஞ)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர் செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் எனக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம் பெற்றது

இவ் போராட்டமானது மன்னார் நகரில் ஞாயிற்றுக்கிழமை 21. 8 .2022 அன்று காலை 10:30 மணியளவில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு வின் ஏற்பாட்டில் மன்னர் மெசிடோ நிறுவனத்தின் ஆதரவில் இடம்பெற்றது

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளாவது

இலங்கையின் வடக்கு கிழக்கைச் சார்ந்த மனித உரிமை பாதுகாவலர்கள் சிவில் அமைப்புகள் பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி அவர்களுக்கு 18 ஆவணி 2022 அன்று கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் சார்ந்த எமது பகிரங்க கோரிக்கையை முன்வைப்பதுடன்

ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான சுதந்திரம் ஆகியன அரசியல் அமைப்பின் மூலமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் ஆகும்

இந்த உரிமைகளை பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களும் சிவில் அமைப்புகளின் செயல்பாட்டாளர்களும் தமது கோரிக்கைகளை தமது நாட்டின் சக பிரதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் வெளிப்படுத்துவதற்காக பயன்படுத்தினர்

அவர்கள் வன்முறையில் ஈடுபட்டுமைக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை தொழிற்சங்க நடவடிக்கைகளும் வெகுஜன போராட்டங்களும் பயங்கரவாத நடவடிக்கைகள் அல்ல மாணவ செயற்பாட்டாளர்கள் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட எவ்வித நடவடிக்கைகளும் ஈடுபடவில்லை

எனவே பல்கலைக்கழக மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க வேண்டாம் என கோருகின்றோம்

இலங்கையில் ஜனாதிபதியே பாதுகாப்பு அமைச்சர் ஆவார் அவ்வகையில் எவரையும் பயங்கரவாத தடைக்கட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு

எனவே தங்களின் மேலான அதிகாரத்தை பயன்படுத்தி மாணவ செயற்பாட்டாளர்களை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்கான தடுப்பு காவல் கட்டளைப் பத்திரத்தில் கைச்சாத்திட வேண்டாம் எனக் கோருகின்றோம்

இலங்கையின் வடக்கு கிழக்கை சார்ந்த சிறுபான்மை தமிழர்களான நாம் தற்போதும் கொடூரமான பயங்கரவாத தடை சட்டத்தின் மனிதத் தன்மையற்ற துன்புறுத்தலை இன்று வரை அனுபவித்து வருவதோடு அச்சட்டத்தின் காட்டுமிராண்டித்தனமான சுபாவத்தினை நேரடியாக எதிர்கொண்ட அனுபவங்களும் எமக்கு உண்டு

இளம் வயதில் கைது செய்யப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள் 30 – 40 வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தை சிறையில் கழித்து வருகின்றனர் சிலர் வெளிச்சத்தை காணாது சிறைக்குள்ளேயே மாண்டு போயினர்

இலங்கையில் சிறுபான்மை மக்களான எம்மை பொறுத்தவரையில் இந்நாட்டில் யாரும் இனிமேல் பயங்கரவாத தடைத்தட்டத்தின் கீழ் விசாரிக்கப்படக்கூடாது அத்துடன் அற வழி போராட்டக்காரர்கள் அனைவரையும் உடன் விடுவிக்குமாறு தங்களை கூறுகின்றோம் என இவ்வாறு தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *