அலுவலகர்கள் பலர் தங்களில் அதிகம் சுயபற்று கொள்வதால் சமூதாயத்துக்கும் நிறுவனங்களுக்கும் இவர்களுடைய அர்ப்பணிப்பு அற்று போகின்றது. துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன்

( வாஸ் கூஞ்ஞ)

நாம் இப்பொழுது தமிழ் பண்பாடு கலாச்சரங்களை மறந்து இப்பொழுது கையடக்க தொலைபேசியில் மூழ்கி விட்டோம் மாணவர்கள் இளைஞர்கள் திருக்குறலின் மகிமையை இதன் தத்துவங்களை அறிந்து வாழ்க்கையில் இணைத்துக் கொண்டால் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும். இன்றைய காலத்தில் பலர் தங்களிலேயே பற்றாக காணப்படுகின்றனர் ஆனால் தாங்கள் வேலை செய்யும் நிருவனங்களிலோ இடங்களிலோ பற்றற்று இல்லாது காணப்படுகின்றனர். சமூதாயத்துக்கு நிறுவனங்களுக்கு இவர்களுடைய அர்ப்பணிப்பு இல்லாமையால் பல நிறுவனங்கள் சவாலுக்கு உள்ளாகியுள்ளது என வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டுதலில் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டு பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா செவ்வாய்க்கிழமை (16.08.2022) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி த.மங்களேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்

நவீன தொழில் நுட்பம் காரணமோ அல்லது அவர்களின் வீட்டுப் பழக்கமோ தெரியவில்லை. வீட்டில் பெற்றோர் சொல்வதற்கு பிள்ளைகள் செவி சாய்ப்பதில்லை. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் பிழையான வழியில் வாழத் துடிக்கின்றனா

மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

திருவள்ளுவரால் உருவாக்கப்பட்ட திருக்குறல் உலகலாவிய ரீதியில் போற்றப்பட்டதொன்றாகும்.

மத இனமற்ற ஒரு பொது நூலாக திருக்குறல் அமைந்துள்ளது. தமிழில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இவ் நூலானது ஐP.யு.போப் அவர்களால் ஆங்கில மொழியில் மொழ்பெயர்க்கப்பட்டது.

இன்றைய காலத்தில் தமிழ் பேசும் நாம் இவ் நூலை பயன்படுத்துவது மிக குறைவாகவே காணப்படுகின்றது.

மேலயத்தவர்கள் ஆங்கில மொழியிலுள்ள திருக்குறலை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நாம் இப்பொழுது தமிழ் பண்பாடு கலாச்சரங்களை மறந்து இப்பொழுது கையடக்க தொலைபேசியில் நாம் மூழ்கி விட்டோம்.

நான் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடிக்கடி கூறுவது தற்பொழுது நண்பர்கள் சிமாட் தொலைபேசியாகவே மாறி விட்டனர் என்று.

நாம் திருக்குறலைப் பார்த்தால் மனித வாழ்க்கையில் முற்று முழுதாக அனுபவிக்கும் நிலைக்கு திருக்குறல் எம்மை இட்டுச் செல்லும்.

திருவள்ளுவருக்கு ஒரு தனி இடம் உண்டு. ஈரடி குறலால் உலகத்திலுள்ள அனைத்து மக்களும் சால சிறந்த கருத்துக்களை கூறும் வகையில் பொது மறையாக அதாவது எந்த மதமும் இல்லை. அனைத்து மதங்களுக்கும் பொருத்தமான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனூடாக தமிழை பெருமை அடையச் செய்தவர் திருவள்ளுவர். ஆகவே இதை முன்னிட்டு இவ்வாறான விழா இவருக்கு எடுப்பது சிறப்பே.

மாணவர்கள் இளைஞர்கள் திருக்குறலின் மகிமையை இதன் தத்துவங்களை அறிந்து வாழ்க்கையில் இணைத்துக் கொண்டால் சிறப்பாக வாழக்கூடியதாக இருக்கும்.

திருவள்ளுவரின் குறலையும் எனது வாழ்க்கையையும் நான் சில சமயங்களில் ஒப்பிட்டு பார்ப்பது உண்டு. சிறுவர்கள் திருக்குறலை படிப்பது அவர்களுக்கு சில சமயம் கடினமானதாக இருக்கலாம்.

ஆனால் பெரியோர் ஆசிரியர்கள் சமூகத்தில் உள்ளவர்கள் சொல்லுகின்ற நல்ல விடயங்களை கேட்டு அவற்றை ஒழுகுவதன் ஊடாக சமூகத்துக்கும் நாட்டுக்கும் சிறந்தவர்களாக காணப்படுவர்.

திருக்குறலில் முதலில் பெற்றோரை சிறப்பித்திருக்கின்றார். ஆனால் இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் தங்கள் பெற்றோரை மதிப்பதில்லை.

தாய் தந்தை குரு கண்கண்ட தெய்வம் என்று நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். எங்கள் காலத்தில் நாங்கள் இவற்றை கடைபிடித்து வருகின்றோம் ஆனால் இன்றைய மாணவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை.

நவீன தொழில் நுட்பம் காரணமோ அல்லது அவர்களின் வீட்டுப் பழக்கமோ தெரியவில்லை. வீட்டில் பெற்றோர் சொல்வதற்கு பிள்ளைகள் செவி சாய்ப்பதில்லை. தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற போக்கில் பிழையான வழியில் வாழத் துடிக்கின்றனர்.

தமிழ் தற்பொழுது அழிந்து போகின்றது. ஆனால் புலம்பெயர்ந்து போனவர்கள் பலர் தமிழை பின்பற்றி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

கனடாவுக்கு நான் சென்றிருந்தபொழுது அங்கு தமிழுக்கு பெருவிழா எடுத்தனர். அனால் எமது பிரதேசத்தில் நாம் கைவிட்டு செல்லுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

திருவள்ளுவரின் குறிக்கோள் சமூகத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலே அவர் திருக்குறலை எழுதியுள்ளார்.

அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துபால் என திருவள்ளுவர் எழுதியிருக்கின்றார். இப்பொழுது இந்த அறத்துப்பாலை வாழ்க்கையில் கடைபிடிக்காது செல்லும் சமூகமாக மாறிவிட்டது.

திருக்குறல் வாழ்வுக்கு உகந்தது என்பதால்தான் நாம் இதை இன்று சிந்திக்கின்றோம்.

இன்றைய காலத்தில் பலர் தங்களிலேயே பற்றாக காணப்படுகின்றனர் ஆனால் தாங்கள் வேலை செய்யும் நிருவனங்களிலோ இடங்களிலோ பற்றற்று இல்லாது காணப்படுகின்றனர்.

சமூதாயத்துக்கு நிறுவனங்களுக்கு இவர்களுடைய அர்ப்பணிப்பு இல்லாமையால் பல நிறுவனங்கள் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

இன்றைய காலத்தில் நன்மை செய்வதைவிட தீமை செய்வதிலேயே பலர் விழிப்பாக இருக்கின்றனர்.

இதனால் தான் திருவள்ளுவர் எமக்காக வாழ்வியல் குறலைத் தந்து சென்றுள்ளார் என இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *