அவுஸ்திரேலியாவிற்கு அமெரிக்க உயர்தர வேர்ஜினீயா வகை நீர்மூழ்கிகளை வழங்கும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்கா அதன் சகாவை ஏமாற்றுவதற்காக பழைய நீர்மூழ்கிகளை வழங்காது என ஜனநாயக கட்சியின் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ கேட்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா அவுஸ்திரேலியாவிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நீர்மூழ்கிகளை  வழங்குமா அல்லது புதிய நீர்மூழ்கிகளை வழங்குமா என்ற ஏபிசி நிகழ்ச்சியின் கேள்விகளிற்கு பதில் அளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் உங்களிற்கு என்ன சொல்வேன் என்றால் உங்களிற்கு உயர்தர நீர்மூழ்கி கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேர்ஜீனீயா வகை நீர்மூழ்கிகளின் ஆயட்காலம் 35 வருடங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து அவுஸதிரேலியா 2030 இல் வேர்ஜீனீயா வகை நீர்மூழ்கிகள் ஐந்தை கொள்வனவு செய்யும் பின்னர் அதன் பின்னர் பிரிட்டனில் வடிவமைக்கப்பட்ட  புதிய தலைமுறை நீர்மூழ்கியை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோ பசுபி;க்கில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக 2021 இல் அறிவிக்கப்பட்ட அவுக்கஸ் திட்டத்தின் அடிப்படையிலேயே இது இடம்பெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *