2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் ‘சுப்பர் – 12’ சுற்றின் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்களுக்கிடையிலான போட்டியில் நியூஸிலாந்து அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக டெவோன் கொன்வே 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் ஜோஸ் ஹெசில்வூட் 41 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இந்நிலையில், 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 111 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக க்ளென் மெக்ஸ்வெல் 28 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியின் டிம் சவ்தி 6 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.