அவுஸ்திரேலியா உக்ரைனில் தூதரகத்தை திறக்கவேண்டும் – தூதுவர் கவசவாகனத்தில் வரவேண்டும் – ஜெலென்ஸ்கி

யுத்தத்தில் சிக்குண்டுள்ள உக்ரைனில் அவுஸ்திரேலியா தனது தூதரகத்தை மீண்டும் திறக்கவேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவுஸ்திரேலியாவின் தூதுவர் புஸ்மாஸ்;டர்  கவசவாகனத்தில் உக்ரைன் திரும்பவேண்டும் என அவர் விரும்பம் வெளியிட்டுள்ளார்.

 

உக்ரைனிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் சிறப்பான உறவுகள் உள்ளன இதன் காரணமாக யுத்தத்தின்போது பெரும் ஆதரவு கிடைத்துள்ளது எனவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.அவுஸ்திரேலிய தூதுவர் உக்ரைன் தலைநகருக்கு மீண்டும் வரவேண்டும் என விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு மொழிபெயர்ப்பாளர் மூலம் பதிலளித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி இந்த கேள்வியை கேள்விப்படுவது சிறப்பான விடயம் ஆம் என பதிலளித்துள்ளார்.

 

நான் இது குறித்து மகிழ்ச்சியடைவேன் எனக்கு அவுஸ்திரேலியாவுடன் உறவுள்ளது அது உண்மையில் உதவியது என ஆங்கிலத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கவசவாகனங்கள் போதாத நிலையை எதிர்கொண்டோம் அவுஸ்திரேலியாவிலிருந்து அவை எப்படி கிடைத்தன என தெரிவிக்கமாட்டேன் ஆனால் அவை கிடைத்த அது மிகச்சிறந்த விடயம் என ஜெலென்ஸ்கி இதன் காரணமாகவே நான் அவுஸ்திரேலிய தூதுவருடன் கைகுலுக்க விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தயவு செய்து புஸ்மாஸ்டர் கவசவாகனத்தில் வாருங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *