அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டத்தினால் இந்திய அணி‍ அபரா வெற்றி

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் அங்கமான இந்திய –  அவுஸ்தி‍ரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில்  ரவிச்சந்திரன் அஷ்வினின் சுழல்பந்துவீச்சு, ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் பட்டேலின் சகல துறை ஆட்டம் ஆகியவற்றின் உதவியுடன் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் ‍ அபரா வெற்றியீட்டியது.

இந்தியாவின் ராஜ்கொட்டில் கடந்த 9 ஆம் திகதியன்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய தனது முதல் இன்னிங்ஸில் 177 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. மார்னுஸ் லபுசாங்சே அதிகபட்சமாக 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸுக்காக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அணித்தலைவர் ரோஹித் ஷர்மாவின் சதம் மற்றும் ஜடேஜா- அக்ஸர் பட்டேல் ஜோடியின் இணைப்பாட்ட உதவியுடன் இந்திய 400 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சில்தனது முதலாவது டெஸ்ட் போட்டியில் கால் பதித்த சுழற்பந்துவீச்சாளரான டோட் மர்பி 7 விக்கெட்டுக்களை சாய்த்து அசத்தினார்.

223 ஓட்டங்கள் என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா அஷ்வின், ஜடேஜாவின் சுழலில் மீண்மொரு வீழ்ந்தது. இதில் அஷ்வின் 5 விக்கெட்டுக்களையும், ஜடேஜ, மொஹமட் ஷமி இருவரும் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர்.

இப்போட்டியின் சகலதுறைகளில்  ஆற்றல்களை வெளிக்காட்டியிருந்த ஜடேஜா  போட்டியின் நாயகனாக தெரிவானார்.

4 போட்டிகள் கொண்ட தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிப்பதுடன், இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி  எதிர்வரும் 17 ஆம் திகதி டெல்லியில் ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *