ஆசிய சம்பியன்களுக்கு ஆதரவாக டயலொக் வாழ்த்து ஸ்டிக்கர் பிரசாரம் ஆரம்பம் !

தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் இலங்கை இருபது 20 கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக தேசிய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் வாழ்த்து ஸ்டிக்கர் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளது.

ஆசியக் கிண்ண 2022 இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வெற்றிகொண்டு 6ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்ற பின்னர், நமது சிங்க அணியினர், உலகின் தலைசிறந்த அணிகளுக்கு எதிராக  போட்டியிட்டு இரண்டாவது முறையாக இருபது 20 உலகக் கிண்ணத்தை சுவீகரிக்கும்  நோக்கத்தில் களம் இறங்கியுள்ளனர்

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நெதர்லாந்து அணிகளை வெற்றிகொண்டு  இருபது 20 உலகக் கிண்ண சுப்பர்  12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆதரவாக ரசிகர்களை அணிதிரட்ட தேசிய அணியின் அனுசரணையாளரான டயலொக் ஆசிஆட்டா மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நாடளாவிய ஸ்டிக்கர் பிரசாரம் சீரற்ற காலநிலைக்கு மத்தியில்  நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுகின்றது.

ஸ்டிக்கரில் உள்ள QR குறியீட்டை  Scan செய்வதன் மூலம், இலங்கை கிரிக்கெட் ஆதரவாளர்கள் தேசிய கிரிக்கெட் அணி இ20 உலகக் கிண்ணத்தை வென்று எட்டு வருடங்களின் பின்னர் மீண்டும் கிண்ணத்தை தாய் நாட்டிற்கு கொண்டுவருவதற்கு வாழ்த்தலாம், உற்சாகப்படுத்தலாம்.

கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்துவதற்கான போர்ட்டலை அணுக dlg.lk/apekollo ஐப் பார்வையிடுங்கள். தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பதுடன் டயலொக் வழங்கும் உற்சாகமான கிரிக்கெட் நினைவுச் சின்னங்களை வெல்வதற்கும் தங்கள் வாழ்த்துக்களைப் பதிவு செய்யலாம்.

‘இலங்கை அணி உலகின் சிறந்த அணிகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதானது   இருபது  20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் விளையாடிவரும் தேசிய அணிக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பதாக அமையும். மேலும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள டயலொக் ஆசிஆட்டாவிற்கு   நன்றிகளை  தெரிவித்துக்கொள்கின்றேன்’ என்று SLC சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உபுல் நவரத்ன பண்டார தெரிவித்தார்.

2022 ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் பேரவை) ஆண்கள் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியானது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதி உயரிதும் உன்னதம் வாய்ந்ததும் ஆகும். கடந்த வருடம் நடைபெற்ற இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டு உலக சம்பியனான அவுஸ்திரேலியா இம்முறை வரவேற்பு நாடாக இருபது 20 உலகக் கிண்ணப் போட்டியை முன்னின்று நடத்துகின்றமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *