2022 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்கான ஆசிரியர்கள், வழிகாட்டல் கோவையின் நிபந்தனைகளுக்கு அமையவே தெரிவு செய்யப்படுவார்கள் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.

விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர்  எல் எம் டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்களை திருத்துவதற்கான ஆசிரியர் தெரிவு தொடர்பான வழிகாட்டல் நிபந்தனைகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் வாயிலாக அறிந்துக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இணைய வசதியற்ற ஆசியரியர்கள் 011 2 785 231 அல்லது 011 2 785 216 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பதன் வாயிலாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *