2022 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின், சுப்பர் 12 சுற்றில் குழு 1 இற்கான இன்றைய போட்டியில், ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களைப்பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் 28 ஓட்டங்களையும், உஸ்மான் காஹ்னி 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும், லஹிரு குமார 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 18.3  ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 9 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் தனஞ்சய டி சில்வா 42 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் அணியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ராஷித் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *