( எம்.நியூட்டன்)
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, நுணசை சிவன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (05) நடந்த உற்சவத்தில் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய கும்பலால் இந்த திருட்டு மேற்கொள்ளப்பட்டது.
ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஐந்தரை பவுண் நகை இவ்வாறு களவாடப்பட்டது.
இந்நிலையில் முறைப்பாடு கிடைக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்ட இளவாலை பொலிஸார் ஒரு பெண் (43) மற்றும் ஆண் (வயது 26) நபர்களை கைது செய்துள்ளதுடன் ஒரு பெண் தலைமறைவாகியுள்ளார்.
இதன்போது திருடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை பொலிஸார் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.