இங்கிலாந்து மகளிர் அணியை வென்றது இந்திய மகளிர் அணி

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 333 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிசார்பில் துடுப்பாட்டத்தில், அணித்தலைவி ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டமிழக்காது 143 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில், 334 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.