இந்தியாவில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும் கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குவஹாத்தியில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சிலின் 70-வது கூட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய போது குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்தவும், இணைப்பை மேம்படுத்தவும், பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை உருவாக்க வடகிழக்கு மாநிலங்களின் நிதி ஒழுக்கம் அவசியம். உள்துறை அமைச்சர் வடக்கு கிழக்கு வளர்ச்சிக்கு மூன்று முக்கிய தடைகளை இதன் போது சுட்டிக்காட்டினார்.
பல தசாப்தங்களாக வடகிழக்கு – தீவிரவாத குழுக்களின் வன்முறை, ரயில், சாலை மற்றும் விமான இணைப்பு இல்லாததுள்ளது. முந்தைய அரசாங்கங்களால் வடகிழக்கு வளர்ச்சியில் உந்துதல் காணப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள அனைவரும் வடகிழக்கு மாநிலத்தின் மொழிகள், கலாச்சாரங்கள், உணவு வகைகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை பாரம்பரியமாக கருதுகின்றனர். மேலும் இந்த பிராந்தியத்தின் அடையாளத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பாடுபடுகிறது என்று உள்துறை அமைச்சர் ஷா மேலும் கூறினார்.
வடக்கு கிழக்கின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணத்தைக் கண்டறிந்த பிறகு, அவற்றைத் தீர்க்க இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் தற்போது உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் அதை உலகில் இரண்டாவது இடத்தைப் பெறுவதற்கு வடகிழக்கு மாநிலங்களின் நிதி ஒழுக்கம் அவசியம் என்று ஷா கூட்டத்தில் கூறினார்.
வடகிழக்கு மாநில முதலமைச்சர்கள் வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், சுற்றுலா, காடு வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்யில் முழுமையான பங்களிப்புடன் செயற்பட வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியாவின் அனைத்து மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம் நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சி சாத்தியம் என நம்புகிற. மேலும் தொடக்கக் கல்வி தாய்மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இயற்கை விவசாயம் மற்றும் டிஜிட்டல் வேளாண்மைக்கு முன்னுரிமை அளித்து வருகிறது என்றார்.