அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற கஅணி என்ற சாதனையை இந்தியா பதிவு செய்துள்ளது.
இந்த வருடத்தில் மாத்திரம் இந்திய அணி இதுவரை 21 வெற்றிகளை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தமையே இதுவரை சாதனையாக கருதப்பட்டது.
இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் ராகுல் ட்ராவிட்டை பின்தள்ளி, விராட் கோலி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 24 ஆயிரத்து 78 ஓட்டங்களை பெற்றுள்ள நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ள சச்சின் டெண்டுல்கர் 34 ஆயிரத்து 357 ஓட்டங்களையும், 3 ஆம் இடத்தில் உள்ள ராஹூல் டிராவிட் 24 ஆயிரத்து 64 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.