
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், அவுஸ்திரேலிய அணிக்கு மிகவும் சவாலாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் மார்ச் மாதம் வரையில் இந்தியாவில் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இறுதியாக 2004 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வெற்றிக்கொண்டதுடன் அதன் பின்னரான டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை.
எனவே, எதிர்வரும் தொடருக்கு ஆடுகளங்களுக்கு ஏற்றவகையில் துடுப்பாட்ட வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியா அணி சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் குறிப்பிட்டுள்ளார்.