
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஜங்கர் செக்டார் பகுதியில் எல்லை தாண்டிய பாகிஸ்தானிய படை உறுப்பினர் ஒருவர், இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
இரண்டு நாட்டு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இந்தியாவின் ஒரு ராணுவ மேஜர் மற்றும் மூன்று படையினர் மாநிலத்தின் எல்லையில் கொல்லப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அத்துமீறி தாக்குதல் நடத்தியபோதே மேஜர் உட்பட நான்கு இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர்.
எனினும் சேத விபரங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை.