ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் இன்று 5.4 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இப்பூகம்பத்தினால் ஜகார்த்தாவில் கட்டடங்கள் குலுக்கியதாக ஏ.எவ்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஜகார்த்தாவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சியான்ஜூர் நகருக்கு அருகில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கிலோமீற்றர் ஆழத்தில் இக்பூகம்பம் ஏற்பட்டது.
இப்பூகம்பத்தினால் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து பல கட்டடங்களிலிருந்து வெளியேறினர்.