இன்று எரிபொருள் விலையில் மாற்றமா..! கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலையில் இன்றைய தினம் மாற்றம் மேற்கொள்ளப்படுமா என்பது தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அதன்படி எரிபொருள் விலையில் இன்று திருத்தம் இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Leave a Reply

Your email address will not be published.