இயக்குனர் நடிகர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு

பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததாக பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கியமான குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ராக்கி மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கிக் கொடுத்துள்ளனர். வெற்றிமாறனின் விடுதலை படத்திலும் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார்.

இந்நிலையில் இப்போது அவருகு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மதுரை விமான நிலையத்தில் அவர் மயக்கம் அடைந்ததாகவும், அதன் பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவர் இப்போது நலமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.