இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி புத்தளம் பகுதியில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம், துவிச்சக்கரவண்டியொன்றின் மீது மோதியதில் அதில் பயணித்த நபர் படுகாயமடைந்தார்.
இந்த விபத்தினால் படுகாயமடைந்த 45 வயதான குறித்த நபர், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
சுமார் 15 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (30) உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் உடல் இன்று காலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.