(எம்.வை.எம்.சியாம்)

ஹோமாகமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹோமாகம – பனாகொடை பகுதியில் உள்ள இராணுவ முகாமில் சேவையாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 28 வயதுடையமாத்தளை – நாவுல பகுதியைச் சேர்ந்த வராவார்.

இவரது தற்கொலைக்கான காரணம் இன்று வரை அறியப்படவில்லை. ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *