
அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழங்கப்படவுள்ள மொத்த பணப்பரிசு 199 கோடியே 6 இலட்சத்து 30 ஆயிரத்து 320 ரூபாவாகும் (5,600,000 அமெரிக்க டொலர்கள்).
சம்பியனாகும் அணிக்கு 56 கோடியே 87 இலட்சத்து 51 ஆயிரத்து 520 ரூபாவும் (1,6000,000 டொலர்கள்), இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 28 கோடியே 43 இலட்சத்து 75 ஆயிரத்து 760 ரூபாவும் (800,000 டொலர்கள்) பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.
அரை இறுதிப் போட்டிகளில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு தலா 14 கோடியே 21 இலட்சத்து 87 ஆயிரத்து 880 ரூபா (தலா 400,000 டொலர்கள்) கிடைக்கும்.
இதேவேளை சுப்பர் 12 சுற்றில் 30 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு கோடியே 42 இலட்சத்து 18 ஆயிரத்து 788 ரூபா வீதமும் (தலா 40,000 டொலர்கள்) சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 2 கோடியே 48 இலட்சத்து 82 ஆயிரத்து 879 ரூபா (70,000 டொலர்கள்) வீதமும் வழங்கப்படும்.
அதேபோன்று முதல் சுற்றில் (தகுதிகாண்) நடைபெறவுள்ள 12 போட்டிகளில் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு கோடியே 42 இலட்சத்து 18 ஆயிரத்து 788 ரூபா வீதமும் முதல் சுற்றுடன் வெளியேறும் 4 அணிகளுக்கு இதே அளவு தொகைப் பணமும் வழங்கப்படும்.