(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் புராதன சிலை வைத்திருந்த மற்றும் புதையல் தோண்டுவதற்கு முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிரிபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் ரத்மல்கண்டிய பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் முச்சக்கரவண்டியொன்று சோதனைக்கு உட்படுத்திய போது புதையல் தோண்டுவதற்கு சென்றுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடம் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தபடும் உபகரணங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 முதல் 42 வயதுடைய கல்கிரியாகம, ஹாரிஸ்பத்துவ, மாத்தளை மற்றும் தொலபிஹில்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, பிபில பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வேகம பிரதேசத்தில்  பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 612 அடி உயரம், 2 கிலோ 342 கிராம் நிறையுடைய சிலையுடன் மூவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்  22 36 மற்றும் 56 வயதுடைய பிபில பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் பிபில நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில்  பிபில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *