
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ், ‘இளந்தமிழன்’ வசந்த் ரவி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வரும் ‘வெப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள்.
‘சவாரி’, ‘வெள்ள ராஜா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வெப்பன்’.
இதில் சத்யராஜ், வசந்த் ரவி, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன், நடிகை தன்யா ஹோப், ராஜீவ் கோவிந்த பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். எஸ். மன்சூர் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, ‘வேட்டை தொடரும்…’ என படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
சத்யராஜின் வித்தியாசமான தோற்றம்… வசந்த் ரவியின் கையில் றொக்கட் லாஞ்சர்… நடிகராக அறிமுகமாக ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜுவ் மேனனின் கையில் இயந்திரத்துப்பாக்கி… பின்னணியில் கருப்பு வண்ணம்… இவை அனைத்தும் படத்திற்கான எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடையே எகிற செய்திருக்கிறது.