இலங்கையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு – பாக்கிஸ்தான் தெரிவிப்பது என்ன

பாக்கிஸ்தானுடனான டெஸ்ட் தொடரின் போது ஆட்டநிர்ணயசதி இடம்பெற்றது என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்பு பிரிவின் உதவியை நாடியுள்ளமை தொடர்பில் கருத்துக்கூறுவதற்கு பாக்கிஸ்தானின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை மறுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு;ச்சபை விசாரணை செய்யும் விடயம் குறித்து பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் எதனையும் தெரிவிக்க முடியாது என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.இரண்டு நாடுகளிற்கும் இடையிலான சமநிலையில் முடிவடைந்த டெஸ்;ட் தொடரில் ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளமை தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையோ அல்லதுஐசிசியோ எங்களை அணுகவில்லை என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்களை அணுகாதவரை நாங்கள் எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐசிசியின் ஊழல்தடுப்பு பிரிவு தற்போதெல்லாம் சர்வதேச போட்டிகளை உன்னிப்பாக கண்காணிக்கின்றது என பாக்கிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஜூலை தொடரின்போதும் அவர்கள் இலங்கையிலிருந்தனர் எதுவும் இடம்பெறவில்லை எந்த சந்தேகமும் எழவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *