இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ சி சி இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரில், அயர்லாந்துடனான போட்டியில் பந்து வீசுவதற்கு தயாராகவிருந்த நிலையில் உபாதைக்குள்ளானார்.
இந்த நிலையில் துஷ்மந்த சமீரவிற்கு நாளைய தினம் அவுஸ்திரேலிய – மெல்பேர்ன் நகரில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கிண்ண கிரிக்கட் தொடரின் போட்டி கைவிடப்பட்டுள்ளது.
மழைக்காரணமாக இந்தப் போட்டி கைவிடப்பட்டது.
இதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, குழு ஒன்றின் புள்ளிப்பட்டியலில் அயர்லாந்து அணி, 3 புள்ளிகளையும் அயர்லாந்து அணி 3 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
இதேவேளை குழு ஒன்றின் புள்ளிப்பட்டியலின்படி இலங்கை, இங்கிலாந்து, அவுஸ்திரேலிய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
குழு 2இல், இந்தியா 4 புள்ளிகளையும் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் 3 புள்ளிகளை பெற்றுள்ளன.
பங்களாதேஷ் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் எந்த புள்ளிகளையும் பெறவில்லை.