
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சுகாதார துறை ஊழியர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (16) இடம்பெற்றுள்ளது.
சுகாதார சங்கத்தின் ஊழியர்கள் அனைவரும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சுகாதார துறையில் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கும், நாட்டின் நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வை கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.