
இலங்கையின் காற்பந்து சம்மேளனம் மீது, சர்வதேச காற்பந்து சங்கங்களின் சம்மேளனத்தினால் தடை விதிக்கப்படும் அபாயம் இருப்பதாக, இலங்கை காற்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வார் உமார் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அண்மையில் இலங்கை காற்பந்து சம்மேளனத்துக்கு 3 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையினை நியமிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
விளையாட்டுத்துறை அமைச்சரின் இந்த செயற்பாடு சர்வதேச காற்பந்து சங்கங்களின் சம்மேளனத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனால், இலங்கை தடைக்குள்ளாகும் அபாயம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.