இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் கலைக்கப்பட உள்ளதாக வெளியாகும் செய்தி வெறும் வதந்தி என்கிறார் ஜஸ்வர் உமர்

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த மாதம் 31 ஆம் திகதி முதல் கலைக்கப்பட உள்ளதாகவும் இடைக்கால நிருவாகம் அமைக்கப்பட இருப்பதாகவும் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 31 ம் திகதி அனைத்து விளையாட்டுத்துறை சம்மேளனங்களினதும் நிருவாக சபைகளின் பதவிக் காலம் முடிவடைய இருந்தாலும், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பு சீர்த்திருத்தங்களை நிறுத்த எத்தனித்து, இரண்டு லீக்குகள் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததால் இந்த யாப்பு திருத்தங்கள் இடை நிறுத்தப்பட்டன .

FIFA தலைவரை கடந்த வாரம் உத்தியோகபூர்வமாக சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின்பொது இடைக்கால நிர்வாக சபைக்கு குஐகுயு ஒருபோதும் இடமளிக்காது என குஐகுயு தலைவர் தன்னிடம் உறுதி அளித்ததாக ஜஸ்வர் உமர் குறிப்பிட்டார்.

மேலும் யாப்பு திருத்தங்களுக்கான திகதிகளும், தேர்தலுக்கான திகதியும் விரைவில் குறிக்கப்படும் எனவும் அந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் FIFA , AFC அதிகாரிகள் இலங்கை வருகை தர உள்ளனர் . அவர்கள் விளையாட்டு துறை அமைச்சரையும் , இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாகிகளையும்சந்தித்து, தேவையான வசதிகளை செய்து தர உள்ளனர்.

எனவே , சில நபர்களினால் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாகத்தை கலைக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்காது என சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றில் வெளியான செய்திகள் சிலரால் திரிபுபடுத்தப்பட்டவை என அவர் மேலும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *