இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இலங்கை வந்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய செய்தியுடன் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கான திகதி குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அறிவிக்கலாம் என இராஜதந்திர மட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஏனெனில் ஜனாதிபதி ரணில் பதவியேற்றதன் பின்னர் பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

எனவே இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து இலங்கை கவனத்தில் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *