
2015 ஆம் ஆண்டு, ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வெள்ளை மாளிகையை மேற்கோள்காட்டி, வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம், மற்றும் ஈரானின் ஸ்திரமற்ற பிராந்திய செயற்பாடுகளை ஒழுங்கமைக்க மற்றும் அதனை கட்டுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள், தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குறித்த ஒப்பந்தம் தொடர்பில் தாங்கள் ஆராய்ந்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா கடந்த வாரத்தில் குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் அந்த ஒப்பந்தத்தை ஆராய்வதற்கான இறுதி முன்மொழிவு இதுவாகும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.