ஈரோடு இடைத்தேர்தல்: ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை

ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ்  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கடந்த 27ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

238 வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. 77 வேட்பாளர்கள் போட்டியில் இருந்ததால் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 547 வாக்காளர்களில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் ஓட்டுச்சாவடிகளில் வாக்களித்தனர். இது 74.79 சதவீதமாகும். இதுதவிர வாக்குப்பதிவுக்கு முன்பே 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டுகள் பதிவு செய்தனர்.

கடந்த 27ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்குகளில் 350 முதியவர்கள் வாக்குகளும், 44 தேர்தல் பணியாளர் வாக்குகள், 4 ராணுவ வீரர்கள் என மொத்தம் 398 பதிவாகியுள்ளன. இந்த தபால் வாக்குகளில் காங்கிரஸ்  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *