ரஷ்யா தனது நாட்டில் உள்ள சக்திவலு கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனின் மேற்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்கள் மீதான தாக்குதல்களால் பெருமளவிலான மின் உற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நீர் விநியோக மையங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு இதுவரை தாக்குதல்களால் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார்.
இதனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் மற்றும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.