பிரிட்டிஸ் பிரதமர் ரிசிசுனாக் உக்ரைன் தலைநகரிற்கு விஜயம் மேற்கொண்டு உக்ரைன் ஜனாதிபதி வொலெடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது உக்ரைனி;ன் வான்பாதுகாப்பிற்கு நிதி உதவி வழங்குவதாக பிரிட்டனின் உறுதியளித்துள்ளார்.
பிரி;ட்டன் தொடர்ந்தும் உக்ரைனிற்கு ஆதரவாக செயற்படும் என ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் உக்ரைனின் ஆயுதப்படையினருக்கான பயிற்சிகளை அதிகரிக்கும் விசேட இராணுவ மருத்துவர்களையும் பொறியிலாளர்களையும் அனுப்பும் எனவும் ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் விஜயத்தின்போது கைப்பற்றப்பட்ட ஈரானின் ஆளில்லா விமானங்களை ரிசி சுனாக் பார்வையிட்டுள்ளார்- ரஸ்ய படையினர் இந்த ஆளில்லா விமானங்களை உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதலிற்கு பயன்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்திலிருந்;தே பிரிட்டன் உக்ரைனுடன் தோளோடுதோள் நின்றமை குறித்து நான் பெருமிதம் அடைகி;ன்றேன் பிரிட்டனும் அதன் சகாக்களும் தொடர்ந்தும் உக்ரைனிற்கு ஆதரவளிப்பார்கள் என்பதை தெரிவிக்கவே நான் இன்று இங்கு வந்துள்ளேன் என ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்.