”உங்க ஆட்டத்துக்கு ஊரே ஆடுமே”! விஜய்யின் ” வாரிசு ”முதல் சிங்கில் ரிலீஸ்!

விஜய்யின் வாரிசு பட முதல் சிங்கிலை ரிலீஸாகியுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று மாலை படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை தமன் இசையில் விஜய் பாடியுள்ளார். பாடலுக்கான ப்ரோமோ இரு தினங்களுக்கு  முன்னர் வெளியான நிலையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில், தற்போது, எஸ் தமன் இசையில் வாரிசு பட முதல் சிங்கிலை அவர்  தன் டுவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளார். 4.49 நிமிடங்கள் இடம்பெற்றுள்ள இப்பாடலுக்கு விவேக் எழுதியுள்ள பாடல் வரிகள் எழுதியுள்ளது ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
அலங்கார வல்லி, மலையூத்து மூலிகை,  உள்ளிட்ட புதிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளதால், ரசிகர்கள் கொண்டாடி வருவதால்,  இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் மற்றும் ராஷ்மிகாவும் நடனமும் அசத்தலாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *