இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக வளர்ச்சி அடைந்திருக்கும் நடிகர் ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை பிரபல பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தில் இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான ஹிப் ஹொப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இது இவர் கதையின் நாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பின் போது வெளியிடப்பட்டுள்ள காணொளியில் ஹிப் ஹொப் தமிழா ஆதி உடற்கல்வி ஆசிரியராக தோன்றுகிறார். இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.