உணவு நெருக்கடியுள்ள குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் உலக உணவுத் திட்டம்!

அரசர உதவிகள் தேவைப்படும் உணவு நெருக்கடியுள்ள 61,000 குடும்பங்களுக்கு மாதாந்தம் 10000 ரூபா நேரடி பணப் பரிமாற்றங்களை வழங்க உலக உணவுத் திட்டம் (WFP) ஒப்புக்கொண்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தனது இடைக்கால பாதீட்டு உரையில் 61000 வறிய குடும்பங்களுக்காக நான்கு மாத காலத்திற்கு, தலா 10,000 ரூபா நிதியுதவி வழங்குவதற்கான திட்டத்தை அறிவித்தார்.

உத்தேச நலத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த திறைசேரி அதிகாரிகள், இந்த ஆண்டு இறுதி வரை அவசர நிதி உதவி தேவைப்படும் இந்த அடையாளம் காணப்பட்ட உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு உதவி வழங்க உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளதாக நேற்று தெரிவித்தனர்.

வரலாறு காணாத உயர் பணவீக்கம் மற்றும் வருமான இழப்புக்கு மத்தியில், இலங்கையர்களின் எண்ணிக்கையில் உணவுப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி, நாட்டின் மக்கள்தொகையில் 33 சதவீதம் அல்லது 7.15 மில்லியன் மக்கள் தற்போது தினசரி குறைந்தபட்ச ஊட்டச்சத்து தேவைக்கு, குறைவான உணவை உட்கொள்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *