(எம்.வை.எம்.சியாம்)
2022 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கான நாளாந்த கொடுப்பனவை 2,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பிடும் பணிகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தோர் www.doenets.lk இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என்பதுடன், விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால எல்லை எதிர்வரும் 8ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவதனால் 2022 உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதும் தாமதமாகிறது. இதனால் தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.