(எம்.வை.எம்.சியாம்)
அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களுக்கு துப்பாக்கிகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு அவகாசம் வழங்கியுள்ளது.
பெப்ரவரி 6 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியின் படி பெப்ரவரி 06 திகதி முதல் 15 திகதி வரையில் சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக உரிமம் இல்லாமல் வைத்திருக்கும் அனைத்து துப்பாக்கிகளும் இந்த சலுகை காலத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒப்படைக்கும் நபர்களுக்கு எதிராக எந்த வழக்கும் தொடரபடமாட்டாது. கால அவகாசம் முடிவடைந்ததும் உரிமம் இன்றி துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்களை கைது செய்ய பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் கைது செய்து மற்றும் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்க்க இந்த சலுகைக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.