எதிர்வரும் நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் குழாம் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது.

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் 3 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் போட்டிகள் அனைத்தும்  கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *