உள்ளூர் போட்டிகளிலிருந்து சுரேஷ் ரய்னா ஓய்வு

சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரய்னா, இந்தியன் ப்றீமியர் லீக் தொடர் உட்பட அனைத்து உள்ளூர் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் டோனியுடன் சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ரய்னா ஓய்வுபெற்றார்.

அதன் பின்னர் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய சுரேஸ் ரய்னா, தற்போது அனைத்து வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும்ஓய்வு பெறுவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

226 ஒருநாள் போட்டிகளில் 5 ஆயிரத்து 615 ஓட்டங்களையும், 78 இருபதுக்கு 20 போட்டிகளில் ஆயிரத்து 605 ஓட்டங்களையும், 18 டெஸ்ட் போட்டிகளில் 768 ஓட்டங்களையும் சுரேஷ் ரய்னா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *