எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பிற்கு வரும் பெருந்தொகை மக்கள்! இன்று எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்
தபால் மூல வாக்களிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திவைத்துள்ளது.
இதனையடுத்து இன்று காலை இடம்பெற்ற விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பிற்கு வரவுள்ள பெருந்தொகை மக்கள்
இதன்படி எதிர்வரும் 20ஆம் திகதி பெருந்தொகையான மக்களுடன் கொழும்பிற்கு வந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.